அஜித் 61 திரைப்படத்தில் இணைந்த ரசிகர்களின் கிரஸ் இளம் நடிகர்.!யார் தெரியுமா.?

அஜித் 61 திரைப்படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது அதுமட்டுமில்லாமல் தற்போது மேலும் ஒரு தமிழ் ஹீரோ ஒருவர் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த தகவல் ரசிகர்கள்தான் வைரலாகி வருகிறது.

தல அஜித்திற்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு வலிமை திரைப்படம் திரையரங்கிற்கு வந்துள்ளது இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் வசூலில் கல்லா கட்டி வருகிறது. மேலும் வலிமை திரைப்படத்தை h வினோத் அவர்கள் இயக்கியுள்ளார் போனிகபூர் அவர்கள் தயாரித்துள்ளார்.

இந்தநிலையில் அஜித் 61வது திரைப்படத்தையும் வினோத் அவர்கள் தான் இயக்க இருக்கிறார் எனவும் இந்த திரைப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரிக்க இருக்கிறார் எனவும் தகவல் கிடைத்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தப் போகிறார் என ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

இந்த திரைப்படத்தில் ஒரு அஜித் வில்லனாகவும் மற்றொரு அஜித் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்தது. இந்த நிலையில் அஜித் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது எனவும் அதற்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ், தபு ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது அதுமட்டுமில்லாமல் தற்போது இளம் ஹீரோ இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அதாவது கவின் அஜித் 61 படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment