குழந்தை போல் மாறிய ஐஸ்வர்யா ரஜினி – யார் மடியில் உட்கார்ந்து இருக்காங்க பாருங்கள்.!

aisjwarya rajini

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து தனது திறமையை வெளிக்காட்டி அசத்துவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியான கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கல்யாண கலாட்டா, மாறன்..

போன்ற படங்கள் தோல்வியையும் தழுவி இருக்கின்றன அதிலிருந்து மீண்டுவர தற்பொழுது சிறந்த இயக்குனர்கள் கதை கேட்டு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் நானே வருவேன், வாத்தி  போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் நிஜ வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்தித்து உள்ளார். அந்த வகையில்  நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ருத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

இருவரும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவர்கள் இந்த நிலையில்   திடீரென சில கருத்து வேறுபாடுகள் வரவே பிரிந்து விட்டனர். 18 வருடங்கள் கழித்து பிரிந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து உள்ளது. இவர்களது இரு மகன்களும் தற்பொழுது அப்பாவிடமும், அம்மாவிடமும் மாறி மாறி இருந்து வருகின்றனர்.

தனுஷுடன் அவரது மகன்கள் இருந்த புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வந்த நிலையில் தற்போது தனது மகன் மடியில் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா வெளியிட்டு அசத்தி உள்ளார். இரு மகன்களும் பாசத்திற்கு ஏங்கிப் போய் அப்பா, அம்மாவிடம் நேரத்தை மாற்றி மாற்றி செலவிட்டு வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் தற்போது ஐஸ்வர்யாவுடன் இருக்கும்  இரு மகன்கள்.

aishwarya
aishwarya
aishwarya