கவர்ச்சியில் கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமூகவலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்.!

0

Ishwarya rajesh photo:  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2010 ஆம் ஆண்டு நீ தானே அவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம், அவர்களும் இவர்களும், விளையாட வா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி பிரபலமடையவில்லை.

இதனையடுத்து இவர் 2014 ஆம் ஆண்டு ரம்மி என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக காக்கா முட்டை, தர்மதுரை, வட சென்னை, கனா மற்றும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளார். அதுமட்டுமில்லமால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.இதனையடுத்து அவர் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர உள்ள பொன்னின் செல்வன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கிளாமரான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.

aishwarya rajesh
aishwarya rajesh
aishwaya-rajesh
aishwaya-rajesh