வேற லெவல் இயக்குனருடன் கை கோர்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! இது எப்போ.!

0

தமிழில் கனா,நம்ம வீட்டு பிள்ளை,காக்காமுட்டை,செக்க சிவந்த வானம்,வானம் கொட்டட்டும்,தர்மதுரை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை நிறந்தரமாக தமிழ் ரசிகர்கள் மனதில் பிடித்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தமிழில் பிரபல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார் தற்போது இவர் நிறைய திரைப் படங்களில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து கா/பெ சிங்கம் ரணசிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் ரசிகர்களின் நெஞ்சை தொட்டு விட்டார் என்று தான் கூற வேண்டும் மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கோலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறாராம்.ஆம் இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம்,திட்டம் 2,பூமிகா,டிரைவர் ஜமுனா,தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக் போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவர் நடிக்க உள்ளாராம்.

இதனையடுத்து தற்போதும் இவர் புதிதாக ஒரு திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது ஆம் இவர் கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம் சமுத்திரக்கனி,யோகி பாபு போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்த திரைப்படத்தை இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்க உள்ளாராம்.

aishwarya rajesh
aishwarya rajesh

ஏற்கனவே இவர் அடங்காதே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் அதில் ஜீவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இன்னும் திரைப்படம் வெளியாக வில்லை ஒரு சில காரணங்களால் முடங்கிக் கிடக்கிறது இதனையடுத்து இந்த தகவல் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.