வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்தால் ரசிகர்களிடம் மாட்டிகொண்டு தவிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! இது தான் வாண்டடா வந்து மாட்டுறதோ.

0

aiswarya rajesh: தமிழ் சினிமாவில் பல எதிர்ப்புகளையும் தாண்டி தனது விடா முயற்சியினால் தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பொதுவாக அனைவரும் இவரை கருப்பு பேரழகி என்று தான் கூறுவார்கள்.

ஆனால் இவர் சினிமாவிற்கு அறிமுகமாகும் போது வாய்ப்புகள் தேடி கொண்டிருக்கும் பொழுது இவர் கருப்பாக இருக்கிறார் என்று பலரால் நிராகரிக்கப்பட்டார் அதுமட்டுமல்லாமல் பலர் நீங்கள் துணை நடிகையாக நடிப்பதற்கு மட்டும் தான் லாக்கி என்று பலர் விமர்சித்து இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆங்கிலம் முதலில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு ஆங்கிலத்தில் பேச நன்றாக கற்றுக் கொண்டார். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டில் நீ தானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

அதனை தொடர்ந்து காக்காமுட்டை திரை படத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்தி தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இவர் எந்த ரோல் கொடுத்தாலும் அதில் முழுமையாக இறங்கி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவ்வாறு திரையுலகில் பிஸியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடித்த டி ஷர்ட்டை இவரின் அண்ணனும் இவரும் அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு காரணம் இவர் இந்தி தொலைக்காட்சி பேட்டியில் எனக்கு இந்தி தெரியும் என்று கூறியிருந்தார் அந்த காட்சி இணையதளத்தில் வைரலானது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களே இந்தி தெரியும் சொல்றீங்க அப்புறம் ஏன் இந்தி தெரியாது எழுதிய டீ-சர்ட்டை அணிந்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளீர்கள் என்று பலர் விமர்சித்து வருகிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த செயல் சற்றே ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

aishwaryarajesh
aishwaryarajesh