மணப்பெண் கோலத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்.!இணையதளத்தை அலற விட்டு வரும் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமா உலகில் தற்போது பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யார் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியதன் மூலம் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

இதனை தொடர்ந்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோவான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் அதையடுத்து திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.

நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து அட்ட கத்தி திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்திருப்பார் மேலும் இவரது நடிப்பில்  சமீபகாலமாக வெளியாகும் எல்லா திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

தமிழில் நடித்ததன் மூலமாகவே இவர் தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி திரைப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் ஒரு படப்பிடிப்பின் போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணம் முடிந்தது போல புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது ஆம் அந்த திரைப்படம் மலையாளத்தில் உருவான கிரேட் இந்தியன் கிட்சென் என்ற திரைப்படம் ஆகும்.

Aishwarya Rajesh

இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டபோது இதில் ராகுல் ரவீந்திரனுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படப்பிடிப்பின்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகன் தாலி கட்டும் பொழுது எடுத்த புகைப்படம் ஆனது தற்போது வெளியாகியுள்ளது.

Aishwarya Rajesh

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நாங்களும் சற்று நேரத்தில் ஷாக் ஆகி விட்டோம் என்று கூறி வருகிறார்கள்.

Aishwarya Rajesh

Leave a Comment

Exit mobile version