அஜித்தை போலவே பல திறைமைகளை கையில் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! வில் வித்தையில் செம்ம மாஸ் காட்டும் வீடியோ.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் தனது மீடியா பயணத்தை ஆரம்பித்தார்.

அதன்பின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இப்படி சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு வெள்ளித்திரையில் நீதானே அவள் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடை த்தது.

அதை சரியாகபயன்படுத்தி நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் தனது திறமையை வெளிக்காட்ட தொடங்கினார்.

அதிலும் குறிப்பாக அட்டகத்தி, ரம்மி, திருடன் போலீஸ், காக்காமுட்டை, தர்மதுரை, கனா, வடசென்னை போன்ற படங்கள் இவருக்கு நல்ல பேரும் புகழும் பெற்று தந்தன.இதனைத் தொடர்ந்து சைலண்டாக இருந்து கொண்டு வருகிறார்  தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களை வைத்த நடிகையாக இவர் இருந்து வருகிறார்.

மேலும் தமிழகம் தாண்டி தெலுங்கு பக்கத்திலும் தற்போது நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வந்த வேர்ல்ட் ஃபேமஸ் என்ற திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் இவர் வில்வித்தையில் அசத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment