தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது முன்னணி நடிகைகளுக்கு கூட பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களிடம் படவாய்ப்பு அதிகரித்துள்ளதுதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்தால் பல முன்னணி நடிகைகள் அதிர்ந்து போய் உள்ளனர்.
ஏனென்றால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா அவர்கள் முன்னணி நடிகர்களுடன் தற்போது நடித்து வந்தாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத நிலையே தோன்றி வருகிறது. இருப்பினும் தான் இருக்கும் இடம் தெரியாமல் சைலண்டாக பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்கள் இவரை தேடி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கில் இவர் நடித்த கானா திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது , இவருக்கு பொன்னியின் செல்வன் மற்றும் துருவ நட்சத்திரம், இது வேதலம் சொள்ளும் கதை போன்ற படங்கள் தற்பொழுது அவரது பிடியில் உள்ளது என கூறப்பட்டு வருகின்றன இருப்பினும் இன்னும் சில படங்களில் அவர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் சமீபத்தில் நடித்து மிகப் பெரிய ஹிட்டான படம் எங்க வீட்டு மாப்பிள்ளை இப்படத்தில் தங்கை கேரக்டரில் நடித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட வாய்ப்பு உயர்ந்து வருகிறது இந்த நிலையில் கொரோனா வைரசால் நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது அதனால் மக்கள் யாரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் எப்படி உங்களால் போஸ்ட் போடா முடியுது என கேள்வி கேட்டு வருகிறார்கள்.