கருப்பு நிற ஆடையில் மாடர்ன் லுக்கில் ஆளை அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!! வைரலகும் புகைப்படம்!

0

Actress Aiswarya Rajesh new look photo: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2010 ஆம் ஆண்டு நீ தானே அவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து உயர்ந்திரு 420, அட்டக்கத்தி, சட்டப்படி குற்றம், அவர்களும் இவர்களும், விளையாட வா, புத்தகம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி பிரபலமடையவில்லை.

இதனை தொடர்ந்து அவர் 2014 ஆம் ஆண்டு ரம்மி திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். இவர் அனைத்து படங்களிலுமே கிராமத்து பெண் தோற்றத்தில் நடித்திருந்தார். பிறகு இவர் கூட மேல கூட வச்சு என்ற பாடலின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தனர். இதனைதொடர்ந்து அவர் சிறந்த கதைகளையுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதிலும் குறிப்பாக கனா திரைப்படத்தில் இவரின் நடிப்பை மிகவும் சிறப்பாக வெளிக்காட்டி இருப்பார்.

அதுமட்டுமில்லமால் காக்காமுட்டை, தர்மதுரை, வடசென்னை, நம்ம வீட்டு பிள்ளை, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் போன்ற படங்களின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார். மேலும் தற்போது அவர் துருவ நட்சத்திரம், பூமிகா, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் கருப்பு நிற உடையில் கியூட்டான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

aishwarya-rajesh
aishwarya-rajesh