என்னால விஜய் கூட அப்படியெல்லாம் நடிக்க முடியாது.! ஒரே போடாக போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், வசூல் மன்னனாகவும்  வலம் வருபவர், இவர் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருக்கிறார், விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர், இவர் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடித்து வருகிறார். மேலும் இவர் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அப்பொழுது நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை பற்றிக் கேள்வி கேட்டிருந்தார்கள், அதுமட்டுமில்லாமல் அப்பொழுது ஐஸ்வர்யா ராஜேஷ்ஷிடம் விஜய் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என கேட்டார்கள்.

அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய்க்கு தங்கையாக மட்டும் நடிக்கவே மாட்டேன் வேண்டும் என்றால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன் இதுதான் என்னுடைய ஆசையும் என கூறினார்.

Leave a Comment