அட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் இந்த சீரியல் நடிக்கிறா.! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..

0

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் சின்னத்திரையில் பணியாற்றியவர் அதாவது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தனது முதல் பணியை ஆரம்பித்தார்.

மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடனத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார் அதுமட்டுமில்லாமல் அந்த போட்டியில் வெற்றி பெற்றார். மக்கள் மனதில் பிரபலமடைந்து நீதானே அவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

மேலும் இவர் நடிப்பில் புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இவர் பல திரைப் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் முதன்முதலாக நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படம் தான் காக்கா முட்டை. இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடித்து வந்தார் அந்த வகையில் ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், மனிதன் தர்மதுரை, குற்றமே தண்டனை, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் ஹீரோயினாக மட்டுமல்லாமல் நடிகர்களுக்கு தங்கையாகவும் நடித்துள்ளார் அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்துள்ளார்.

பலரும் நடிக்க தயங்கும் தங்கை கதாபாத்திரத்தில் மிகவும் துணிச்சலாக நடித்து இருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் இது பலருக்கும் தெரியாத விஷயம் தான். ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் ஒரு சின்னத்திரை நடிகர் ஆவார்  சின்னத்திரையில் மணிகண்டன் என்பவர் தான். ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் இவர் அழகு சீரியலில் நடித்திருந்தார் இவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் இவரா என ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

aiswarya-rajesh
aiswarya-rajesh