தன்னுடைய அழகினால் பலரையும் கட்டி போட்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய் இவர் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் உலக அழகி என்ற பட்டம் பெற்றார் மேலும் தமிழில் இயக்குனர் மணிரத்தினத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு இந்திய சினிமாவில் டாப் இடத்தினை பிடித்தார். இவர் நடிகர் அஜித் குமாருடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
மேலும் பல மொழிகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு தற்பொழுது ஆராத்யா என்ற மகனும் இருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது நடிகை ஐஸ்வர்யா ராய் முன்பு போல திரைப்படங்களின் நடிப்பதே இல்லை தான் நடிக்கும் திரைப்படங்கள் அளவை குறைத்துக் கொண்ட நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யாராயின் மகள் பெரியவளாக வளர்ந்து இருக்கிறார்.
எனவே தற்பொழுது தான் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரையும் மிரள வைத்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் அபிஷேக் பச்சன் புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை வாங்கி உள்ளார் ஏற்கனவே இந்த அணி கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நேற்றைய இறுதி போட்டியில் புனேரி பால்டன்ஸை வீழ்த்தி கோப்பையை மறுபடியும் வெற்றி பெற்று உள்ளது.
இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த ஐஸ்வர்யா ராய் துள்ளி குதித்து விளையாடி தன்னுடைய அணியின் வீரர் அஜித் குமாரை பாராட்டி கைப்பிடித்தபடி உற்சாகப்படுத்தினார். அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் நடிகை ஐஸ்வர்யாராயின் மகளும் இருக்கிறார்.
வீடியோவை பார்க்க இந்த கிளிக் செய்யவும்.