இளசுகளின் ஃபேவரட் நடிகை ஐஸ்வர்யா மேனன்.! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகாவுடன் இணைந்து நடித்துள்ளார்.! எந்த படம் தெரியுமா.?

பொதுவாக திரையுலகில் நடிகைகளாக இருந்தாலும் நடிகர்களாக இருந்தாலும் முதலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான் படங்களில் நடிகராகவும், நடிகைகளாகவும் நடிக்க  தொடங்குவார்கள்.அந்தவகையில் தற்போது பிரபல நடிகைகளாக திரையுலகில் கலக்கி வருபவர்கள் திரிஷா,சமந்தா இவர்கள் கூட முதலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பின்புதான் நடிகைகளாக மாறி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்பொழுது இளைஞர்களின் தற்போதைய கிரஷ்ஷாக இருந்து வருபவர் ஐஸ்வர்யா மேனன் ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் சித்தார்த் நடிப்பில் திரையுலகிற்கு வெளிவந்த படம் தீயா வேலை செய்யணும் குமாரு இப்படத்தில் ஹன்சிகா நடித்துள்ளார் இவருக்கு தோழியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா மேனன் முதலில் 2013ஆம் ஆண்டில் வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, தமிழ் படம் 2 போன்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். இதற்கு அடுத்ததாக தான் கிருஷ்ணா நடிப்பில் தமிழில் வெளிவந்த திரைப்படம் வீரா இதில்தான் முதன் முதலாக கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஹிப்ஆப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் என்ற படத்தில் பிரபலமடைந்தார்.

aishwarya-menon-
aishwarya-menon-

தற்பொழுது உள்ள  இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்  எனவே இவர் இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக இருந்து வருகிறார்.

Leave a Comment