நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து தமிழில் தமிழ் படம் நேரெதிர் கோமளவள்ளி ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.
ஆனாலும் இவருக்கு நல்ல ரசிகர் கூட்டத்தை பெற்றுத்தந்த திரைப்படம் தமிழ் படம் இரண்டு தான் அதேபோல் இவர் கன்னடம் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார், ஆனால் இவருக்கு அந்த திரைப்படங்கள் அவ்வளவாக கைகொடுக்கவில்லை இந்த நிலையில் தமிழில் ஹிப்ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகரிடம் கலவையான விமர்சனங்களை பெற்று கொடுத்தது, இந்த நிலையில் இவருக்கு தற்போது எந்த ஒரு பட வாய்ப்பு அமையாததால் விரைவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது விதவிதமாக புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.