தடுப்பூசி போட்டுக்கொள்ள டக்கராக ஐடியா கொடுத்தா ஐஸ்வர்யா மேனன்.! வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்

0
ashwariya menon
ashwariya menon

பல நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்புகளைப் பெற்று இருப்பார்கள். ஆனால் அவர்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படங்களில் இவரைப் பற்றி பெரிதாக கண்டு கொண்டு இருக்க மாட்டோம் அந்த வகையில் ஒருவர்தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த தீயா வேலை செய்யணும் குமாரு திரைப் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இன்னும் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இதன் மூலம் இவர் பிரபலம் அடையவில்லை.

அதன் பிறகுதான் தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இவர் கடைசியாக தமிழில் ஹிப்ஹாப் ஆதி உடன் இணைந்து நான் சிரித்தாள் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது.

எனவே தொடர்ந்து பல லட்சக்கணக்கான மக்களும் உயிரிழந்து வருகிறார்கள். அதோடு கொரோனா தோற்றால் பாதி போர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதிலும் முக்கியமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிணை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

எனவே கொரோனா தடுப்பூசி எந்த மருத்துவமனையில் கிடைக்கும், எதை மாதிரி மருந்து உள்ளிட்ட இன்னும் பல தகவல்களை  பற்றிய தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார் ஐஸ்வரியா மேனன்.இதோ அந்த வீடியோ.