உனக்கு நான் சலைத்தவன் கிடையாது என ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு போட்டியாக களமிறங்கும் தனுஷ்.! சபாஸ் சரியான போட்டி

0
dhanush-aishwarya-rajini
dhanush-aishwarya-rajini

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் தமிழை தாண்டி ஹாலிவுட் பாலிவுட் என கொடிக்கட்டி பறக்கிறார் தற்பொழுது ஆல் ரவுண்டர் நடிகர் என்றால் அது தனுஷ் தான் தமிழ் சினிமாவில் அந்த அளவிற்கு மிக உச்சத்தை அடைந்துள்ளார். இந்த நிலையில் தனுஷ் தற்பொழுது வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு   இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் இருவரும் பல வருடங்களாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தார்கள் இந்த நிலையில் திடீரென இருவரும் பிரியப்போவதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இந்த அறிவிப்பு சினிமா பிரபலங்களை மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏனென்றால் இரண்டு மகன்கள் இருக்கும் இந்த நேரத்தில் இது தேவையா என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் மூன்று.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இந்த நிலையில் தனுஷை பிரிந்த பிறகு தனது வேலைகளில் மும்பரமாக இருந்து வருகிறார் இந்த நிலையில் தற்பொழுது புதிதாக ஐஸ்வர்யா ரஜினி ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் அந்த திரைப்படத்திற்கு லால் சலாம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த திரைப்படத்தில் ரஜினி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வருவார் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக  தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் அதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த நிலையில்  நடிகர் தனுஷ் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

மிகவும் பிரமாண்டமாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து விஷ்ணு விஷால் நடிக்க இருக்கிறார். இதுவரை படத்தை இயக்குவதில் பெரிதாக நாட்டம் இல்லாமல் இருந்த தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு போட்டியாக தற்பொழுது படங்களை இயக்க ஆரம்பித்துள்ளார். சமீப காலமாக இருவரும் படங்களை இயக்கி வருவதால் இவர்களுக்கு இடையே மறைமுகமாக போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.