மாடுகளுக்கு பதிலாக இரண்டு மகளை வைத்து ஏர் உழுத விவசாயி.! கண் கலங்கவைக்கும் வீடியோ

0

மாடுகளுக்கு பதிலாக 2 மகள்களை கலப்பையில் பூட்டி ஏர் உழுது விவசாயம் செய்துள்ளார் ஒரு விவசாயி இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் விவசாயி ஒருவர் பணம் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு பதிலாக தன்னுடைய இரண்டு மகள்களையும் உழவு பணி செய்துள்ளார் விவசாயி நாகேஸ்வர ராவ் கொரோனா ஊடகங்கள் தன்னுடைய சொந்த நிலத்தில் விளைந்த தக்காளியை வெளிமாநிலங்களுக்கு சென்று விற்க முடியாத நிலையில் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் தன்னுடைய விடா முயற்சியை கைவிடாமல் மீண்டும் தன்னுடைய நிலத்தில் தக்காளியை பயிரிட முடிவு செய்த விவசாயி நாகேஸ்வரராவ் அதற்கான பணியை தொடங்கினார் ஏரு ஓட்டுவதற்கு மாடுகளை பயன்படுத்தவும் கலப்பை வாங்குவதற்கு காசு இல்லாததால் தன்னுடைய விடா முயற்சியை கைவிடாமல், 2 மகள்களை கொண்டு ஏர் உழுதுள்ளார்.

விளைநிலத்தில் கலப்பையை 2 மகள்களை வைத்து இழுக்க செய்து அந்த கலப்பையை பின்னே அழுத்தியவாறு செல்கிறார் நாகேஸ்வரராவ், அவருடைய மனைவி தக்காளி விதையை போட்டுக்கொண்டு வருகிறார்.

இந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது, கொரோனா ஊரடங்கு இப்படி விவசாய மக்களையும் பெரிதாக பாதித்துள்ளது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இருந்தாலும் இப்படி விடாமுயற்சியை கைவிடாமல் விவசாயம் செய்துள்ளார்.