சாகப்போகும் கோடீஸ்வரி! சண்டை போடும் சித்ராதேவி.. ஆஹா கல்யாணம்..

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் கோடிஸ்வரி மகா காணவில்லை என்பதற்காக மகா மட்டும் வரல நான் செத்து போயிடுவேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார். உடனே அதைக் கேட்ட சித்ராதேவி நீங்க செத்து போய்ட்டு அந்த பழியை எங்க மேல போட பாக்குறீங்கள எங்கள கம்பி என்ன வைக்கணும்னு ஒரு முடிவோட இருக்கீங்க போல என சண்டை போடுகிறார். அந்த சமயம் பார்த்து மகா வீட்டுக்கு வருகிறாள். அப்போது  சித்ராதேவி கோடிஸ்வரியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

உடனே  மகா என்னாச்சு என கேட்க நீ காணாமல் போனதுக்கு நாங்க தான் காரணமாம்.அதனால உங்க அம்மா எங்க எல்லாத்தையும் பயங்கரமா பேசுறாங்க என சொல்ல உடனே மகா கோடீஸ்வரியிடம் ஏன் மா இப்படி பண்ற  இவங்கள பத்தி தெரியாதா? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அப்பா நீங்களும் இப்படியா பேசுவீங்க நீதி, நியாயம் சொல்லி வளர்த்தீங்க ஆனா நீங்களே இப்படி பேசி இருக்கீங்க என கேட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது  சித்ராதேவி போதும் போதும் நிறுத்து உன் நாடகத்தை என சொல்கிறாள். நடந்த எல்லா பிரச்சனைக்கும் நீ தான் காரணம் நீ தான் யார்கிட்டயும்  சொல்லாம கொள்ளாம எங்கேயோ போயிட்டா உங்க அம்மா அப்பா வந்து எங்கள சண்ட போடுறாங்க என சொல்ல உடனே ராஜலட்சுமி மகாவை பார்த்து யார்கிட்டயும் சொல்லாம எங்க போன என கேட்கிறார்.

அதற்கு தாத்தாவும் பாட்டியும்  அவளுக்கு ஒரு வேண்டுதல் அதனால் யார் கிட்டயும் சொல்லக்கூடாது சொன்னா பலிக்காது என்பதற்காக சொல்லாம போயிட்டா என சொல்ல இதை என்னால நம்ப முடியாது என ராஜலட்சுமி சொல்கிறாள். உடனே விஜய்யின் அம்மா சூர்யாவை பார்த்து நீ நம்புறியா இல்லையா என கேட்க அதற்கு சூர்யா நான் நம்புறேன் என பதில் சொல்கிறார்.

அதோடு ராஜலட்சுமி மகா அப்பா அம்மாவை பார்த்து ஒரு சம்பந்தி கிட்ட  பேசுற மாதிரியே பேசுறாங்க உங்க அம்மா அப்பா என சொல்கிறார்.  அதற்கு பாட்டி அவங்க பொண்ண காணோங்குற பதட்டத்துல பேசிட்டாங்க. நீ மட்டும் என்ன மகா வீட்டுல சூர்யா வழுக்கி விழுந்ததற்கு போய் எவ்வளவு சண்டை போட்டு வந்த  அது மாதிரி தான் அவங்க பொண்ணு மேல அவங்களும் பாசமா இருப்பாங்க என சொல்கிறார்.

உடனே மகாவின் அம்மா அப்பா அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்கின்றனர். அதுபோல மகாவும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார். அதனைத் தொடர்ந்து பிரபா வீட்டில் அம்மா அப்பாவை காணும் என தேடுகிறார். அப்போது வீட்டுக்கு வரும் அம்மா அப்பாவை பார்த்து காலையிலியே எங்க போயிட்டீங்க எனக் கேட்கிறார். உடனே நடந்த அனைத்தையும் கோடீஸ்வரி சொல்ல பிரபா என்கிட்ட ஏன் சொல்லல என கேட்க அதோடு நம்ம ரெண்டு பொண்ணுங்க அங்க வாழ்றாங்க ன்னு தெரியாம இப்படியா நீ பேசுவ என பிரபா திட்டுகிறார்.

 அதனைதொடர்ந்து சூர்யாவும் மகாவும் ரூமில் பேசிக் கொள்கின்றனர். ஆமாம் நீ எங்க போன சொல்லு என கேட்கிறார். அதற்கு மகா அங்க எல்லாத்து முன்னாடியும் நம்புறேன்னு சொல்லிட்டு இப்ப சந்தேகப்படுறீங்க அப்ப என் மேல உங்களுக்கு சந்தேகம் இருக்கா என கேட்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.