வீட்டை விட்டு வெளியேறிய மகா!! தாத்தா பாட்டியிடம் திட்டு வாங்கி தேடும் சூர்யா!!ஆஹா கல்யாணம்.

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் மகா வீட்டிற்குள் பிரபா தனியாக உட்கார்ந்து இருக்கிறார்.அப்போது அங்கு வரும் கோடீஸ்வரி எல்லாம் வெளிய டான்ஸ் ஆடிட்டு ஜாலியா இருக்காங்க நீ மட்டும் ஏன் இங்க வந்து உட்கார்ந்து இருக்க எனக் கேட்கிறார். அதற்கு பிரபா எனக்கு தலை வலிக்குது நான் வீட்டுக்கு போறேன் என கூறுகிறாள். உடனே கோடீஸ்வரி வீட்டுக்கு போகாத போனின்னா தப்பா போயிடும் என சொல்கிறாள். அதற்கு பிரபா என்னலாம் யாரும் தேட மாட்டாங்க, என சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து  அனைவரும் பிரசாதம் சாப்பிட உட்காருகின்றனர். அப்போது பாட்டி பிரபா எங்க காணும் என கேட்கிறார். அதற்கு கோடீஸ்வரி அவளுக்கு தலைவலி அதனால வீட்டுக்கு போயிட்டா என சொல்கிறாள். உடனே பாட்டி பிரசாதம் சாப்பிட்டு போய் இருக்கலாம் இல்ல என சொல்கிறாள்.அதற்கு கோடிஸ்வரி அவளுக்கு தலை வலிச்சா எதுவும் சாப்பிட மாட்டா என சொல்கிறார்.

சாப்பிட்டுவிட்டு அனைவரும் வீட்டுக்கு கிளம்புகின்றனர். அப்படி போகும் போது கோடீஸ்வரி சூர்யாவுக்கு நன்றி சொல்கிறார். இந்த தடவை தான் நான் இங்க இருந்து சந்தோஷமா போறேன். நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படி ஒண்ணா இருக்கணும். அதான் எனக்கு சந்தோஷம் என சொல்ல. அதற்கு சூர்யா நீங்க கவலைப்படாதீங்க ஆன்ட்டி மகா இங்க இருக்குறவரை நல்லா இருப்பா என சொல்கிறார். அவர்கள் போனதும் உடனே மகா கார்டனுக்கு போய் சூர்யா எழுதிய அந்த பேப்பரை எடுத்து படிக்கப் போகிறார். படிப்பதற்கு முன்பே மகா அவர் என்ன எழுதியிருந்தாரோ அவர் ஆசையை நிறைவேற்றுவதற்காக நான் என்ன வேணா செய்வேன் என நினைத்துக் கொண்டே பேப்பரை ஓபன் பண்ணி படிக்கிறாள்.

அதில் சூர்யா தாத்தாவுக்கு உடம்பு சரியில்ல, அதனால அவருக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்காக நான் மகாமேல பாசமா இருக்கிறது போல நடிக்கிறேன். ஆனா அவ நான் உண்மையா பாசமா இருக்கேன்னு நம்புறா அவள பார்க்கும் போதெல்லாம்  எனக்கு  ஒரே குற்ற உணர்ச்சியா இருக்கு என எழுதி இருக்கிறார்.

அடுத்த சீனில் கோடீஸ்வரி வீட்டுக்கு போகிறார்..அங்கு பிரபா லைட் கூட போடாமல் உட்கார்ந்து இருக்கிறார். என்னடி தலை வலிக்குதுன்னு சொன்னா நீ தூங்கிட்டு இருப்பன்னு பாத்தா ஆனா உக்காந்திருக்க எனக் கேட்கிறார். அதற்கு  பிரபா எனக்கு ரொம்ப பசிக்குது அம்மா, ஏதாவது சாப்பிட செஞ்சு கொடு எனக் சொல்கிறாள். பிரபா விஜய்யை நினைத்து பார்க்கிறாள். பிரபாவின் மனசாட்சி  பிரபாவிடம் நீ எப்படி விஜய்யும் அனாமிக்காவையும் பிரிக்கிறான்னு யோசிக்கிறியா என கேட்கிறது. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என மனசாட்சியிடம் பிரபா பேசிக் கொண்டிருக்கிறார்.

பிறகு அடுத்த சீனில் மகா ரூமுக்கு சென்று போட்டிருந்த நகைகளை கழட்டி வைத்துவிட்டு ஏற்கனவே நடந்த விஷயங்களை நினைத்து பார்த்த படியே வீட்டை விட்டு வந்து விடுகிறாள். வீட்டில் இருக்கும்  சூர்யாவோ மகாவை காணும் காணவில்லை என்று கிச்சன், தாத்தா ரூம், மொட்டை மாடி, கார்டன் என அனைத்து இடத்திலும் தேடிக்கொண்டிருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல்  நான் பேசுனது ஏதாவது அவளுக்கு மனசு கஷ்டமா இருக்குமோ அதான் மனச கஷ்டப்பட்டு எங்கேயாவது போய் இருப்பாலோ என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் தாத்தாவும் பாட்டியும் சூர்யாவை பார்த்து நீ எதுவும் சொல்லாம அவபோயிருக்க மாட்டா நீ தான் ஏதோ பண்ணிட்ட எனக் கேள்வி கேட்கின்றனர். அதற்கு சூர்யாவும் நான் எதுவும் செய்யல தாத்தா என சொல்லிக்கொண்டே யோசித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.