ராஜலேக்ஷ்மியை தூண்டிவிட்ட சித்ரா.! மகாவை ரெண்டுல ஒன்னு பார்க்கும் மாமியார்.! ராஜலக்ஷ்மிக்கு எதிராக ஒன்னு சேர்ந்த குடும்பம்..

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் மகா டீ போட்டு எடுத்துப் போகிறாள்.அப்போது மகாவை சித்ரா ஏய் ஏய் என மரியாதை இல்லாமல் கூப்பிடுகிறார். அதனால் மகா காதுல வாங்காதது போல் செல்கிறாள். உடனே சித்ரா மகாவை என்ன கூப்பிட கூப்பிட மரியாதை இல்லாம போயிட்டே இருக்க என முறைக்கிறாள்.

அதற்கு மகா எனக்கு பேர் இருக்கு நம்ம கூட்டு குடும்பத்தில் இருக்கோம். அப்போ எல்லாரும் ஒண்ணா இருக்கணும்  மரியாதையா கூப்பிடுங்க மரியாதை இல்லாம நடத்தினால் நான் எதுவும் செய்ய மாட்டேன் என சொல்கிறாள். அதெல்லாம் எனக்கு தெரியாது உடனே போய் முதல்ல நீ எனக்கு காபி போட்டு வா இத அப்படியே வச்சுரு ஆறி போனாலும பரவாயில்லை என சொல்கிறாள் அதற்கு மகா இந்த காபியை கொடுத்துட்டு வந்து வேணா நான் போடுறேன் அப்படி இல்லன்னா போட முடியாது என சொல்லிட்டு போயிடுறா. 

 அதனால் கோபமான சித்ரா இதுக்கு உன்ன பழி வாங்காம விட மாட்டேன் என மனசுக்குள்ளே சொல்லுறாள்.  பிறகு மகா விஜய்க்கு காபி கொடுக்கிறார். அப்போது என்ன அனாவமிக்கா நினைப்பிலேயே உட்கார்ந்து இருக்கீங்களா என கேட்கிறாள். அதற்கு விஜயோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி நான் தான் அவள அப்படின்னு நினைக்கிறேன். ஆனா அவ அப்படி இல்ல என சொல்கிறான். அதற்கு மகா இல்ல அவளுக்கும் தான் உன்ன புடிச்சிருக்கு எங்களுக்கே தெரியுது உனக்கு தெரியலையா நீ வேணும்னா யோசிச்சு பாரு என சொல்கிறாள்.

பின்னர் அதனைத் தொடர்ந்து  வேலைக்காரி மீனாட்சி ராஜலட்சுமி யிடம் பணம் கேட்கிறாள். அதற்கு ராஜலட்சுமி கொடுக்க முடியாது என சொல்லி விடுகிறாள். இதனை  பார்த்த சித்ரா இதை வைத்து எப்படியாவது மகாவுக்கும் ராஜலட்சுமிக்கும் சண்டை மூட்டி விட வேண்டியது தான் என முடிவு பண்ணுகிறாள். உடனே சித்ரா மீனாட்சியிடம் சென்று நீ போய் மகாவை கேளு அவ கண்டிப்பா உனக்கு பணம் தருவா என சொல்கிறாள்.

உடனே மீனாட்சி மகாவிடம் பணம் கேட்கிறாள். பிறகு மகாவும் சூர்யாவிடம் சொல்லிவிட்டு 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வருகிறாள். அதற்குள் சித்ரா ராஜலட்சுமியிடம் மகா இந்த வீட்டு எஜமானியாக பார்க்குறா என ஏத்தி விடுகிறாள்.

மகா பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து மீனாட்சியிடம் இந்தாங்க அக்கா எனக் கொடுக்கிறாள். அப்போது ராஜலட்சுமி ஏய் நிறுத்து உனக்கு என்ன இந்த வீட்டு எஜமானின்னு நினைப்பா,இது என்ன உங்க அப்பா வீட்டு பணமா என மகாவை திட்டிக் கொண்டிருக்கிறாள். அப்போது வீட்டில் உள்ள அனைவரும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சூர்யாவின் அப்பா, தாத்தா மற்றும் பாட்டி ராஜலட்சுமி இப்படி பேசுவதால் கடுப்பாகி பார்க்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.