தோத்தவன் செத்துருவான் ஜெயிச்சவன் மட்டும் தான் உயிருடன் இருப்பான் வைரலாகுது அக்னி சிறகுகள் டீசர்.!

தமிழ் சினிமாவில் முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து  வருகிறார் நடிகர் அருண் விஜய்.

இவர் நடிப்பில் உருவான அனைத்து திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் அதன்பிறகு எந்த ஒரு திரைப்படமும் சொல்லும் அளவிருக்கு அமையவில்லை.

இந்நிலையில் கதாநாயகனாக நடிப்பதை விட வில்லனாக நடித்து தற்போது தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அக்னி சிறகுகள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. விரைவில் இந்த திரைப்படம் ரிலீசாக இருக்கும் நிலையில் அக்னி சிறகுகள்  திரைப்படத்தின் டீசர் சமிபத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த டீசரில் தோத்தவன் செத்துருவான் ஜெயிச்சவன் மட்டும் தான் உயிருடன் இருப்பான் என்ற ஆவேசமான வசனத்தை கொண்ட இந்த டீசர் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளாக நிரம்பியுள்ளது.

அருண் விஜய்,பிரகாஷ் ராஜ்,விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நடராஜன் இசையில்  சிவா தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

Leave a Comment