விக்ரம் படத்திற்கு முன்பாகவே கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஏஜென்ட் டினா – எந்த படத்தில் தெரியுமா.?

0
kamal-and-agent-deena
kamal-and-agent-deena

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயை வைத்து மாஸ்டர் இன்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்ததை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசனுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து விக்ரம் என்னும் திரைப்படத்தை இயக்கினார். படம் சற்று வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

வசூலிலும் இதுவரை 300 கோடிக்கு மேலாக ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த படம் வெற்றிபெற என்னதான் கதை களமாக இருந்தாலும் இதில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் அந்தவகையில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் போன்றவர்கள் பின்னி பெடலெடுத்தனர்.

இவர்களுடன் இணைந்து ஏஜென்ட் டினா கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிரட்டு இருந்தார். ரசிகர்களும் அவருடைய கதாபாத்திரத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவரைப் பற்றிய செய்திகளை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். ஏஜென்ட் டினா இதற்கு முன்பாக அஜித் மற்றும் விஜய் படங்களில் நடனம் ஆடி அசத்தி உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

ஆனால் ஏஜென்ட் டினா கமலுடன் விக்ரம் படத்திற்கு முன்பாகவே ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியது. சூப்பர் ஹிட் திரைப்படமான அன்பே சிவம்  படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார் இதோ ஏஜென்ட் டினா மற்றும் கமல் இருக்கும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.