மீண்டும் வெளியாகியது பிகில் படத்தின் அப்டேட்.!

0

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பிகில்’ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய வசனங்கள் இணையதளத்தில் வைரலானது அதுமட்டுமில்லாமல் விஜய் பொதுமேடையில் எப்பொழுதும் அரசியல் கலந்து பேசுவார், இந்த முறையும் இசை வெளியீட்டு விழாவில் அப்படித்தான் பேசினார், இது இணையதளத்தில் வைரலானது அது மட்டுமல்லாமல் சில விமர்சனங்களையும் சந்தித்து.

இந்தநிலையில், தற்போது ‘பிகில்’ படத்திற்கான பின்னணி இசை வேலைகளை ஏ.ஆர். ரகுமான் முடித்து விட்டதாக அட்லி தெரிவித்துள்ளார். அதோடு, பிகில் படத்திற்கு சிறப்பான பாடல்களை கொடுத்திருந்த ஏ.ஆர்.ரகுமான், இப்போது அற்புதமான பின்னணி இசையும் கொடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.