மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்.! ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில்

0
cricket
cricket

தென் ஆப்பிரிக்கா ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது இதில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது அதற்காக இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் உலக கோப்பை தொடரில் காயத்தால் பாதியிலேயே வெளியேறிய விஜய் சங்கர் இந்தப் போட்டியில் இடம் பிடித்துள்ளார்.

விஜய் சங்கர் உடன் மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரம் இடம் பிடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூர், சஞ்சு சாம்சன், நித்தீஷ் ராணா ஆகியோர்கள் போட்டியில் இடம் பிடித்துள்ளார்கள். மேலும் முதல் மூன்று போட்டிகளுக்கு மனிஷ் பாண்டே தான் கேப்டனாக தலைமை ஏற்கிறார் அடுத்த இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக அணியை வழிநடத்துவார்.

முதல் 3 போட்டி : மணீஷ் பாண்டே -கேப்டன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், அன்மோப் பிரீத், ரிக்கி புய், இஷான் கிஷான்-விக்கெட் கீப்பர், விஜய் சங்கர், ஷிவம் துபே, குணால் பாண்ட்யா, அக்ஷர் படேல், சாஹல், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், கலீல் அகமது, நிதீஷ் ராணா

கடைசி 2 போட்டி : ஸ்ரேயாஸ் அய்யர்-கேப்டன், சுப்மன் கில், பிரஷாந்த் சோப்ரா, அன்மோல் பிரீத் சிங், ரிக்கி புய், சஞ்சு சாம்சன்-விக்கெட் கீப்பர், நிதிஷ் ராணா, விஜய் சங்கர், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், ராகுல் சாஹர், ஷர்துல் தாகூர், துஷார் தேஷ்பாண்டே, இஷான் பரோல்.