சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது, அதனால் ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த நேரத்தில் ரிலீஸ் ஆகாது, இதற்கு முன் அஜித்தின் படமான விவேகம் படத்தை இயக்கும் பொழுது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அவசர அவசரமாக செய்தது போல் இந்த திரைப்படத்தில் நடக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் சிறுத்தை சிவா.
அதனால் ரிலீஸ் தேதி எவ்வளவு தாமதம் ஆனாலும் படத்தின் வேலைகளை சிறப்பாக முடித்து விட்டு தரமாக கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார், அதனால் இந்த திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ஒருவேளை தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆனால் அஜித்தின் வலிமை திரைப்படத்துடன் மோதும் நிலைமை ஏற்படும், ஏனென்றால் வலிமை திரைப்படத்தையும் படக்குழு வருகின்ற தீபாவளி தினத்தில் வெளியிட இருக்கிறது. இதற்கு முன் வெளியாகிய ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விசுவாசம் திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகி ஒரே நேரத்தில் மோதிக்கொண்டன.
குடும்ப பாங்கான திரைப்படம் என்பதால் விசுவாசம் பேட்ட திரைப்படத்தின் மோதி வெற்றி பெற்றது, இந்தநிலையில் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து படத்தை இயக்க சிறுத்தை சிவா திட்டமிட்டுள்ளாராம்.