மீண்டும் அதே நடிகர் அதே இயக்குனர் சன் பிக்சருக்கு கைக்கொடுக்குமா இந்த கூட்டணி.!

தமிழ் சினிமாவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய எந்திரன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அறிமுகம் கொடுத்தது. எந்திரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜயை வைத்து சர்க்கார் என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தது. இந்த இரண்டு திரைப்படங்களும் சன் பிக்சருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தொடர் வெற்றியால் சன் பிக்ச்சர் நிறுவனம் அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரிக்க முன் வந்தது அதுமட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின்  திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்தது அதேபோல் மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரிப்பதற்கு சன் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. அப்படி தான் சமீபத்தில் ரஜினியை வைத்து அண்ணாத்த என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார்கள்.

அதன் பிறகு சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் விஜயை வைத்து பீஸ்ட் ஆகிய மூன்று திரைப்படங்களையும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்தார்கள். என்னதான் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை தயாரித்தாலும் சன் நிறுவனத்திற்கு பெரிது சறுக்கல் தான். தளபதி விஜயை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறதாம் சன் பிக்சர் நிறுவனம் இந்த திரைப்படத்தை பிரபலம் முன்னணி இயக்குனரான சிறுத்தை சிவா இயக்குனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியாக பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும்  ஒரு சிலரிடம் கலவையான விமர்சனங்களை   பெற்றது. அதே போல் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம்  சொல்லவே தேவையில்லை  பெரிதாக வசூல் ஆகவில்லை என கூறப்படுகிறது அப்படி இருக்கும் நிலையில் மீண்டும் விஜய் மற்றும் சிறுத்தை சிவா இருவரும் இணை இருக்கிறார்கள் என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் இவர்கள் காம்போ வெற்றி பெறும் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment