லவ் டுடே படம் பார்த்துவிட்டு முதல்வரிடம் போனை மாத்திக்கலாமா என்று கேட்ட துர்கா ஸ்டாலின்.! அதற்கு முதல்வர் கூறிய பதில் என்ன தெரியுமா.?

cm
cm

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் லவ் டுடே படத்தினை பார்த்துவிட்டு தன்னுடைய மனைவியிடம் இது குறித்து பேசிவுள்ளார் இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அதாவது தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் தான் லவ் டுடே.

இதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட பலரின் கூட்டணியில் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்ற கோமாளி திரைப்படத்தினை இயக்கியிருந்தார். லவ் டுடே திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை இவானா  நடித்துள்ளார். மேலும் இவர்களை தொடர்ந்து சத்தியராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இவ்வாறு தானாகவே இயக்கி தானாகவே ஹீரோவாகவும் நடித்திருந்த நிலையில் இவர் ஹீரோவாக நடித்திருக்கும் முதல் திரைப்படம் இந்த படம் தான். இந்த படத்தில் இவருடைய நடிப்புக்கு பலரும் பாராட்டுகளை கூறி வருகிறார்கள் ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த லவ் டுடே படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.

இவ்வாறு வெளியான நாள் முதல் தற்பொழுது வரையிலும் விமர்சன ரீதியாகவும் வசூல், ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் இந்த படம் வெளியாகி 9 நாட்கள் ஆகும் நிலையில் தற்போது வரையிலும் 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் காரணமாக பல பிரபலங்கள் பட குழுவினர்களுக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தினை பார்த்துவிட்டு இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து லவ் டுடே படம் பார்த்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் என்ன சொன்னார் என்பது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆனந்த விகடனுக்கு பேட்டி அளிக்கும் பொழுது கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, லவ் டுடே படத்தை அப்பா, அம்மாவுடன் சேர்ந்து பார்த்தேன் படம் முடிந்து வெளியே வந்ததும் படம் நல்லா இருக்கு உதயானு அப்பா சொன்னார்.

இதைவிட செம காமெடி என் அம்மா சொன்னது தான் படம் சூப்பரா இருக்கே இதே மாதிரி நம்மளும் போனை மாத்திக்கலாம் என்று கேட்டார்கள் நானும் அப்பாவும் ஐயையோ வேணா வேணான்னு சொன்னோம் என சிரித்தபடி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.