திரையரங்கில் எனது நடிப்பை பார்த்துவிட்டு ரசிகர்கள் செருப்பை கழட்டி வீசி அடிக்க முயற்சித்தனர் – பழைய நினைவுகளை பகிர்ந்த நடிகை ரம்யாகிருஷ்ணன்

ramya-krishnan
ramya-krishnan

90 காலகட்டங்களில் ஹீரோயினாகவும் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களை மகிழ்வித்து வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஆரம்பத்தில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் பெரிய அளவு பேசப்படாமல்  இருந்து வந்துள்ளார் மேலும் நடிப்பையும் தாண்டி இவர்  அம்மா குச்சிப்பிடி, பரதநாட்டியம் போன்றவை தான் முதலில்  தான் வளர வேண்டும் என ஆசைப்பட்டார்.

ஆனால் அது நடக்காமல் போனதால் சினிமாவிற்கு வரவேண்டிய சூழல் வந்ததால் பின் நடிகையாக மாறினார்.த தமிழில் தற்பொழுத பெரும்பாலான டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் ரம்யாகருஷ்ணன்.

அவர் கூறியது : ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதற்காக மக்கள் என் மீது செருப்பு வீச்ச முயற்சித்தனர் என கூறி உள்ளார். ஆரம்பத்தில் சிறப்பான படங்களில் நடித்து வந்தேன் அதன் விளைவாக ரஜினியின் படையப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன். படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கதாப்பாத்திரம் மிக முக்கியமானது.

ரஜினிகாந்த் பக்கத்தில் ஹீரோயினாக இல்லாமல் வில்லியாக இருந்தது சற்று வருத்தமாகத் தான் இருந்தது இருப்பினும் சௌந்தர்யா நடித்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்  ஆனால் அதை வெளியே சொல்லாமல் வருத்தத்துடன் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். படம் முதல் நாள் ரிலீஸ் ஆனது எனது தங்கை தியேட்டருக்கு சென்று போய் படத்தைப் பார்த்தால் அங்கு இருந்த மக்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் என் கதாபாத்திரத்தை பார்த்து செருப்பை கழட்டி திரையரங்கில் வீசா முயற்சித்தனர்.

இதனை என் தங்கை பார்த்துவிட்டு வந்து என்னிடம் சொன்னதால் அவ்வளவுதான் எனது கேரியர் முடிந்துவிட்டது என நான் சோகத்தில் உட்கார்ந்து இருந்தேன் ஆனால் நாட்கள் போக போக எனது நடிப்பை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் அது எனக்கு ஆனந்தத்தை கொடுத்தது நீலாம்பரி போன்ற ஒரு சிறப்பான கதாபாத்திரம் எப்பொழுது கிடைத்தாலும் அதில் நடிப்பது எனது கனவு என கூறி உள்ளார்.