மாஸ்டர் டீசரை பார்த்து மிரண்டு போன பிரபலங்கள்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

0

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டியது கொரோனா ஊரடங்கால் படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திலிருந்து ஏதாவது அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் தீபாவளி தினத்தை யொட்டி மாலை 6 மணிக்கு மாஸ்டர் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

இந்த டீசர் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே பல சாதனைகளையும் நிகழ்த்தி வந்தது. இந்த நிலையில் மாஸ்டர் டீசரை பார்த்து பல பிரபலங்கள் மிரண்டு போய் உள்ளார்கள்.

மாஸ்டர் டீசரை பார்த்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள் அவற்றில் சில இதோ.