தளபதியுடன் பல திரைப்படங்களில் ஒன்றாக பயணம் செய்த பிரகாஷ்ராஜ்..! இத்தனை வருடம் ஆகியும் ஏன் இணைந்து நடிக்கவில்லை தெரியுமா.?

தளபதி விஜய் தமிழ் சினிமாவின முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தற்பொழுது வசூல் மன்னனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார், சமீபகாலமாக இவரின் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சொல்லப்போனால் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ஒரு காலகட்டத்தில் விஜய், பிரகாஷ்ராஜ் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தன. ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் வெளியாகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர்களின் கூட்டணியில் வெளியான திரைப்படங்களை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும்.

இவர்கள் கூட்டணியில் உருவான கில்லி, சிவகாசி, போக்கிரி, ஆதி, வில்லு என பல திரைப்படங்கள் ஒன்றாக நடித்துள்ளார்கள், சொல்லப்போனால் ரஜினிக்கு ரகுவரன் வில்லனாக அமைந்தது போல், விஜய்க்கு பிரகாஷ்ராஜ் வில்லனாக அமைந்தார். பிரகாஷ்ராஜ் விஜய்க்கு வில்லனாக நடித்த கில்லி, சிவகாசி ,போக்கிரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலானது.

ஆனால் விஜயின் வில்லு திரைப்படத்திற்கு பிறகு பிரகாஷ்ராஜ் மற்றும் விஜய் இணைந்து நடிக்கவில்லை, அதற்கு காரணம் வில்லு திரைப்படத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு தான் காரணம் என தகவல் கிடைத்துள்ளது, வில்லு திரைப்படம் வெளியாகி இதுவரை 11 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் பிரகாஷ்ராஜ் மற்றும் விஜய் ஒன்றாக இணைந்து நடிக்கவில்ல.

இதற்கு காரணம் பிரகாஷ்ராஜ் விஜய்யை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி விட்டதாக கூறப்படுகிறது, ஆனால் விஜய் தரப்பிடம் கேட்டபொழுது ஒரு படத்துக்கு கால்ஷீட் வாங்கி இருந்ததாகவும் ஆனால் அதில் விஜய் திடீரென நடிக்க மறுத்ததாகவும் அதனால் பிரகாஷ்ராஜ் ஒருமையில் திட்டியதாகவும் அதனால் தான் இருவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இருவரும் ஒன்றாக இருக்கும்பொழுது பிரகாஷ்ராஜ் ஒரு மேடையில் விஜய்தன் அடுத்த சூப்பர் ஸ்டார் எனவும் கூறியுள்ளார் இப்படி ஒன்னும் மண்னுமாக இருந்துவிட்டு தற்பொழுது இணைந்து நடிக்காமல் பிரிந்து இருக்கிறார்கள், இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

இதை பிரகாஷ்ராஜ் மற்றும் விஜய் அறிந்துகொண்டு இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment