நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது. மேலும் விமர்சன ரீதியாக கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக எப்பொழுதும் மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருவதால் இவரை வசூல் நாயகன் என கூறி வருகிறார்கள்.
இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்றது மேலும் தற்பொழுது மாஸ்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பீஸ்ட் மற்றும் மாஸ்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடன இயக்குனராக பணிபுரிந்தவர் ஜானி மாஸ்டர். இவர் முக்கியமாக பீஸ்ட் திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றி இருந்தது பலரையும் கவர்ந்தது. அதுவும் முக்கியமாக அரபிக் குத்து பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாஸ்டர் மற்றும் பீஸ்ட் படங்களை தொடர்ந்து தற்பொழுது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார்.
அந்த வகையில் படப்பிடிப்பின் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் மற்றும் பீஸ்ட் படங்களிடம் பெற்றிருந்த பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் வாரிசு படத்தின் பாடல்களும் ரீச்சாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார்,ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று mவெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Break time clicks from the sets of #Varisu shoot 💥✨️ pic.twitter.com/nzXKCrNpAU
— Jani Master (@AlwaysJani) August 24, 2022