விஜய்க்கு அடுத்து அஜித் உடன் மோதி பல்பு வாங்க காத்திருக்கும் ஒல்லி நடிகர்.! இந்த முறையாவது அது நடக்குமா.?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித்குமார் அவர்கள் தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் இயக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து ஏகே62 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் கடிமையான கோவத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் அப்டேட் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஏகே 62 திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில் தற்போது தனுஷ் அவர்கள் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் அஜித்தும் தனுஷும் திரையில் நேரடியாக மோத இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்ச்சனத்தை பெற்றது. ஆனால் அஜித்தின் துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டையாடியது.

இந்த நிலையில் தற்போது அஜித்தும் தனுஷும் மோத இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது அது மட்டுமல்லாமல் விஜய், அஜித் மோதிக்கொண்டால் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது என்பது போல சரிக்கு சமமான போட்டி நிலவும் ஆனால் இந்த முறை தனுஷ் மற்றும் அஜித் மோதுவதால் தனுஷ் படம் தோல்வியை நோக்கி சரியா நிறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதில் எந்த படம் வெற்றி அடையும் என்று பொறுத்திருந்து பார்ப்போம். உங்களுடைய கருத்தை கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும்.

Leave a Comment