டிக்டாக் மூலம் சினிமா வாய்ப்பை தட்டி தூக்கிய பிரபலங்கள்.! அட லிஸ்ட்டில் இத்தனை பேர் இருக்காங்களா

முன்னாடி எல்லாம் படவாய்ப்புகள் வேண்டும் என்றால் பல கம்பெனிகள் ஏறி இறங்க வேண்டும். அதன் பிறகு ஷார்ட் பிலிம் அறிமுகமானது அதில் நம் நடிப்பு திறமையை காட்டி இயக்குனர்களாகவும், நடிகர்கள் மற்றும் நடிகைகலாகவும் வலம் கொண்டு வந்தார்கள்.

அதன் பிறகு மிகவும் ஈஸியாக டிக் டாக் மூலம் அனைவர் மனதையும் வெகுவாக கவர ஆரபித்தார்கள். டிக் டாக் மூலம் நடிக்க தெரியாதவர்கள் கூட நடிப்பில் ஆர்வத்தைத் தூண்டியது இது மக்களுக்கும் பொழுதுபோக்காக திகழ்ந்தது. இந்த நிலையில் டிக்டாக்கின் மூலமாக அறிமுகமாகி பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நடிகைகள், நடிகர்கள் யார்? யார்? என்று தற்போது காண்போம். அந்த வகையில் முதலாவதாக,

விஷ்ணு உன்னிகிருஷ்ணன்- இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவரை டிக்டாக்கில் 1.3 மில்லியன் பேர்  பின்பற்றி வந்தார்கள். ஷார்ட் பிலிம் மூலம் மிகவும் ஃபேமஸ் ஆனார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் கதிரவன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனை கிளி சீரியல் அரவிந்த் என்ற கேரக்டரிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vishnu unnikirshnan
vishnu unnikirshnan

அக்க்ஷய் கமல் – இவரை கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் டிக்டாக்கில் பின்பற்றி வந்தார்கள்.இதன் மூலம் இவருக்கு ஷார்ட் பிலிம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பல ஷார்ட் பிலிம் நடித்து இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தார். இவனை தொடர்ந்து பிரபல சீரியல் ராஜா ராணி சீரியலில் துணை நடிகராக நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் ராஜாராணி 2வில் இவர் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் இரட்டை ரோஜா சீரியலில் ஹீரோவாக சிவானி நாராயணனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

akshya kamal
akshya kamal

மிருணாளினி ரவி – இவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவராவார். இவரை கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் பின்பற்றி வந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் இவர் சீக்கிரமாகவே தனது நடிப்பு திறமையினால் பிரபலமடைந்து விட்டார். அதன்பிறகு தற்பொழுது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவர் 2017ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த நகல் திரைப்படத்தின் மூலம் வெள்ளிதிரைக்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து சாம்பியன், சூப்பர் பில்கேட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்பொழுது இவர் எம்ஜிஆர் மகன் நகர் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கிற கோபுரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

காயத்ரி ஷாம் – இவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஆவார். இவர் டிக் டாக் மூலமாக 2 லட்சம் பாலோசரை கொண்டிருந்தார். இதன் மூலம் இவருக்கு இலங்கையிலேயே நிறைய ஷார்ட் பிலிமில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் இவர் ஷார்ட் பிலிம் மூலம் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் டிக் டாக்கில் எக்ஸ்பிரஷன்  செய்து பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் 2019ஆம் ஆண்டில் திரையுலகிற்கு வெளிவந்த லவ் ஆக்சன் டிராமா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்பொழுது சில படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜெஸ்ஸிகா – டிக் டாக் மூலமாக பிரபலம் அடைந்தவர்களில் இவரும் ஒருவர். இவர் மெழுகு என்ற மூவியில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து துப்பறிவாளன், ராட்சசன் போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் கல்கி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ப்ரீத்தி ஷர்மா – இவர் டிக்டாக்கில் 6 லட்சம் பாலோசரை கொண்டுள்ளார். இவர் ஸ்கூல் படிக்கும் பொழுதே டிக் டாக் செய்து ஃபேமஸ்சான ஒரு ஆள் என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து கட்டதிற்கு கட்டம் சரியில்லை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஒரு கதை பாடட்டுமா சார் என்ற சீரியலிலும் நடித்து உள்ளார். அதன் பிறகு திருமணம் என்ற சீரியலில் கதாநாயகிக்கு தங்கச்சியாக அனிதா என்ற ரோல்லில் நடித்து வருகிறார். தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் கலர்ஸ் தமிழில் நடிப்பதை விட்டுவிட்டு தற்போது சன்டிவியின் அடுத்து வருகிறார்.

Preethi-Sharma
Preethi-Sharma

Leave a Comment