துணிவு வெற்றியை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகருடன் கூட்டணி வைக்கும் இயக்குனர் வினோத்..!

0

லோகேஷ் கனகராஜுக்கு பிறகு தற்பொழுது தமிழ் சினிமாவில் மிகவும் பேசப்படும் ஒரு இயக்குனர் என்றால் அவர் வினோத் தான் அந்த வகையில் இவர் தன்னுடைய பணியை சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்தது மட்டுமில்லாமல் அதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று இப்பொழுது தல அஜித்தை வைத்து  மூன்று திரைப்படங்கள் இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

அந்த வகையில் வினோத் அஜித் கூட்டணியில் முதன்முதலாக உருவாகிய திரைப்படம் தான் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதன் பிறகு இரண்டாவது முறையாக வலிமை என்ற திரைப்படத்தில் ஒன்று சேர்ந்தார்கள் ஆனால் இந்த திரைப்படம் சுமார் மூன்று வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த காரணமாக நிதி தட்டுப்பாடு ஏற்பட்டதன்  மூலம் சில காட்சிகள் மாற்றியமைக்கப்படாமல் வசூல் ரீதியாக வெற்றியை கண்டாலும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது.

மேலும் இந்த தோல்வியை ஈடு கட்டும் வகையில் தற்பொழுது துணிவு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெறும் அளவிற்கு மாபெரும் வெற்றி கண்டு உள்ளது.

மேலும் தற்பொழுது தல அஜித்தை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்க  இயக்குனர் வினோத் ஆர்வமாக இருப்பதாக தெரியவந்துள்ளது அந்த வகையில் யோகி பாபு உடன் இணைந்து காமெடி கதை களம் உள்ள  ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கமல் மட்டும் தனுஷ் ஆகியோர்களை வைத்து திரைப்படம் இயக்க வினோத் தயாராக உள்ளதாகவும் தற்பொழுது சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் திரைப்படம் முடிவடைந்த பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கமல் நடிக்க இருக்கிறார் ஆகையால் அந்த இரண்டு திரைப்படங்களும் முடிந்த பிறகு வினோத் கமலை வைத்து திரைப்படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

dhanush-
dhanush-

மேலும் கமலை வைத்து திரைப்படம் இயக்க பல வருடங்கள் ஆகும் என்ற காரணத்தினால் தற்பொழுது தனுஷ் ஃபிரியாக இருப்பதனால் அவரை வைத்து ஒரு திரைப்படம் உருவாக்க உள்ளார் இந்நிலையில் தனுஷ் திரைப்படங்கள் சமீபத்தில் எந்த ஒரு திரைப்படமும் பெரும் அளவு வெற்றி பெறவில்லை இதனால் அவர் தற்பொழுது நம்பி இருக்கும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் வெற்றி பெற்று ஆக வேண்டும். மேலும் அதன் பிறகு வினோத்துடன் அவர் கூட்டணி போட உள்ளதாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.