அந்த படத்திற்கு பிறகு ரஜினியும், நானும் நல்ல அண்ணன் – தம்பியாக பழகினோம்..! நடிகர் பிரபு பேட்டி..!

rajini and prabhu
rajini and prabhu

தமிழ் சினிமா உலகில்  அதிக வெற்றி படங்களை கொடுத்து நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இப்போ வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்து வருகிறார் அந்த வகையில் தனது 169 திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து அடுத்தடுத்த படத்திற்கான இயக்குனர்களையும் தேர்வு செய்து ஓடிக்கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இவர் நடிக்கும் படங்களில் ஒரு காட்சியில் கூட வந்து விட மாட்டோமா என பல நடிகர், நடிகைகள் ஏங்கி கொண்டுகின்றனர் ஆனால் அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை ஒரு சிலருக்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது.

அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தம்பியாக பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் பிரபு  இவர் சிவாஜி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபு பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் ரஜினியுடன் நடித்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி படங்கள்தான் அந்த வகையில் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், சந்திரமுகி என சொல்லிக் கொண்டே போகலாம்..

இருக்கின்ற நிலையில் நடிகர் பிரபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது நடிகர் ரஜினிகாந்த் மிகச்சிறந்த நபர் அவரிடம் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு உள்ளேன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு வருவது தொடங்கி மற்றவர்களிடம் பழகுவது யாரை எப்படி அணுகுவது வரை நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்..

அப்புறம் அவருடைய ஸ்டைல் அதைப்பற்றி சொல்ல வேண்டாம் அது நாடே அறிந்தது. அவர் எங்கள் வீட்டில் எல்லா நல்லது கெட்டதுக்கு முன் நின்றார் தர்மத்தின் தலைவன் படத்தில் நான் அவரது சகோதரராக நடித்திருப்பேன் அதன் பின்னர் அவர் உண்மையிலேயே எனக்கு அண்ணனாகிவிட்டார் என பெருமையாக பேசினார்.