வில்லனாக தெலுங்கில் கலக்கியதை தொடர்ந்து!! தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகருடன் கை கோர்க்கும் விஜய் சேதுபதி! யாருன்னு பாருங்க.

0
actor vijay sethupathy
actor vijay sethupathy

தமிழ் சினிமாவில் மிக குறுகிய நாட்களில் தனது நடிப்பு திறமையால் பிரபலமடந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதில் வல்லவர். இவர் சீரியல், காமெடி ஷோக்கள், திரைப்படம் என படிப்படியாக முன்னேறினார்.

இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரின் நடிப்பு அனைவராலும் ரசிக்கபபட்டது. எனவே அதனைத் தொடர்ந்து இவர் தற்போதெல்லாம் நிறைய படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்

அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவியுடன் இணைந்து சைரா நரசிம்ம ரெட்டி எனும் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படமான உப்பெல்லா எனும் திரைபடத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இப்படியே தொடர்ந்து நெகட்டிவ் ரோலுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

எனவே இதனைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுளளார் என கூறப்பட்டு வருகிறது. மேலும் அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் என்ற திரைப்படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் ஐயப்பன் கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி கோஷி கதாபாத்திரத்திலும் நடிக்கப்போவதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர் கைவசத்தில் ஹீரோவாக நடிக்க பல படங்கள் உள்ளதாம். இவை அனைத்துமே கொரோனாவால் தடைபட்டு உள்ளது என திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.