தமிழைத் தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் ஆகும் லவ் டுடே.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் மாறுபட்ட கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் வெற்றியும் பெற்றது.

பிரதீப் ரங்கநாதருக்கு முதல் படவே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார் அதன் பிறகு தற்போது தானே இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படம் வெளியான பிறகு எங்கு போனாலும் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் அடிச்சாம் பாரு உன்னோட எக்ஸ் என்ற வசனம் மிகவும் வைரலானது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவனா அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இந்த படம் மிக பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ரீமேக்காக இருப்பதாக கூறப்படுகிறது. ஹிந்தியில் உருவாகும் இந்த படத்தில் இஷான் கட்டார், அல்லது விக்கி கவுஷல் இவர்கள் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் இருந்து பல திரைப்படங்களை ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், என பல மொழிகளில் ரீமிக்ஸ் செய்வது சகஜம் தான் ஆனால் அறிமுகமாக இரண்டாவது படமே ரீமேக் ஆகிறது என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment

Exit mobile version