அஜித்துக்கு டாட்டா காட்டிவிட்டு தனுஷ் உடன் கைகோர்த்த எச் வினோத்..! இனிமேல் தான் ஆட்டம் சூடு பிடிக்க போகுதே..!

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் வினோத் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நட்டி நடராஜ் நடித்திருந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூலை பெற்று சாதனை படைத்தது.

மேலும் தான் இயக்கிய முதல் திரைப்படத்தில் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்திக்கை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இவ்வாறு தொடர் வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக வினோத் அவர்கள் மாறிவிட்டார். பின்னர் போனி கபூர் வினோத் கூட்டணியில் வலிமை என்ற திரைப்படம் வெளியான நிலையில் தற்போது துணிவு என்ற திரைப்படமும் உருவாகி கொண்டு இருக்கிறது.

மேலும் அஜித் நடிக்கும் இந்த துணிவு திரைப்படம் முழுமையாக படப்பிடிப்பு முடிவடைந்த உடன் இந்த திரைப்படம் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வினோத் அவர்கள் நடிகர் தனுசை வைத்த ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

இந்த திரைப்படத்தினை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தயாரிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு கமல் மற்றும் விஜய் சேதுபதியை வைத்த ஒரு புதிய திரைப்படம் ஒன்றையும் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதன் பிறகு யோகி பாபுவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். எது எப்படியோ தனுசை வைத்து இயக்க போகும் திரைப்படத்தை ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment