நானும் , நயன்தாராவும் சாப்பிட்ட பிறகு.. இந்த வேலையை செய்ய போய் விடுவார் – உண்மையை சொன்ன காதலன்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வெற்றி கண்டு உள்ளதால் அவர் எடுக்கவுள்ள படங்களுக்கான எதிர்பார்ப்பும் தற்போது தாறுமாறாக ஏறி உள்ளது.

மேலும் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி பாடகராகவும் அவர் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடியுள்ளார். தற்போது கூட வலிமை படதிற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.

சினிமாவில் அடுத்தடுத்து அவதாரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாராவையும் காதலிக்கிறார் இதனால் விக்னேஷ் சிவனை சுற்றி ஒரு கூட்டம் தற்போது பின் தொடர்ந்து வருகிறது.

லாக் டவுன் நேரத்தில் விக்னேஷ் சிவனை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்பு கொண்டு பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர் அதற்கு கூலாக விக்னேஷ் சிவனும் பதிலளித்து வருகிறார் அந்த வகையில் நயன்தாரா அழகாக இருக்க என்ன காரணம் என ரசிகர் ஒருவர் கேட்க அவரது பிரார்த்தனையை காரணம் என தெரிவித்தார்.

மேலும் மற்றொரு ரசிகர் நயன்தாரா நடித்த திரைப்படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது எனக் கேட்டார் அதற்கு ராஜா ராணி என கூலாக பதில் சொன்னார்.

மேலும் கேட்டார் ரசிகர் ஒருவர் நயன்தாராவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்று கேட்டார் அதற்கு நாங்கள் டின்னர் முடிந்ததும் வீட்டுக்கு உள்ள அனைத்து பாத்திரங்களையும் நயன்தாராவை கழுவுவார் எனவே குறிப்பிட்டார்.

Leave a Comment