திருமணத்திற்கு பிறகு சதீஷின் புதிய அவதாரம் இனிதான் இருக்கு தரமான சம்பவம்.!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ், காமெடிகளில் பல நடிகர்கள் இருந்தாலும் சதீஷ் காமெடிக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது, இந்தநிலையில் சதீஷ் தற்பொழுது தலைவர் 168 திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

சதீஷ்ர்க்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. திருமணமான சதீஷ் புதிதாக பாடகர் அவதாரம் எடுத்துள்ளதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய தகவலை வெளியிட்டுள்ளார். பிரபல இசையமைப்பாளர் சம் சி எஸ் இசையில் உருவாகிவரும் ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படத்திற்காக சதீஷ் ஒரு பாடலை பாடுவது போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தான் பாடகர் ஆகிவிட்டதாக ஒரே குஷியில் முன்னணி இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரகுமான், டி இமான், விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், அனிருத், தமன், ஹிப்ஹாப் தமிழா, ஆகியோர்களின் பெயர்களை டைப் செய்து பதிவிட்டுள்ளார்.

சதீஷ் அனைத்து இசையமைப்பாளர்களின் பெயர்களை டாக் செய்துள்ளதால் அவர்கள் சதீஷை பாட அழைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment