தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு டாட்டா சொல்லிவிடுவார்கள் அந்த வகையில் பல நடிகைகள் இருக்கிறார்கள், அதில் ஒருவர்தான் வரலாறு படத்தில் நடித்த கனிகாவும்.
கனிகாவின் அப்பா அம்மா இருவருமே இன்ஜினியர்கள், இவர் சிறுவயதில் இருந்து பாடும் திறமை அதிகமாக இருந்தது அதனால் 2001-ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகி போட்டிக்காக இவரை பாட வைத்தார்கள், அதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் அந்த போட்டியில் கடைசி நேரத்தில் ஒரு மாடல் அழகி கலந்துகொள்ளவில்லை அதனால் அந்த அழகி போட்டியில் இவர் கலந்து கொண்டு வென்று விட்டார்.

இதன் காரணமாகவே அவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தன, 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் வெளியாகிய 5 ஸ்டார் திரைப்படத்தில் பிரசாந்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் கனிகா. அதனைத் தொடர்ந்து தமிழில் எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார், பின்பு தனது 26 வயதில் ஷாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார்.
2010 ஆம் ஆண்டு சாய் ரிஷி என்ற மகன் பிறந்தார், திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார் கனிகா அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இதனை கண்ட ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு இப்படி ஒரு போஸ் தேவையா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
