மங்கத்தா படத்திற்கு பிறகு தல அஜித் அவர்கள் நடித்த திரைப்படங்களின் வசூல் நிலவரம் இதோ.!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். ஒரு காலத்தில் அஜித் அவர்கள் பல கஷ்டங்களை அடைந்து இருந்தார் என்பது நாம் அறிந்ததே அதுபோல ஆரம்பத்தில் இவர் விளம்பர படங்களில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து திரையில் 1993 ஆம் ஆண்டு பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் அதே ஆண்டு அமராவதி என்ற திரைப்படத்தின் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பல வெற்றி தோல்விகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமீப காலமாக தல அஜித் அவர்கள் சிறந்த கதையை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிறார் என்றே கூறவேண்டும். அஜித் அவர்கள் மங்காத்தா படத்திற்கு பிறகு தன் திரைப்பயணத்தில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே அந்த வகையில் இத்தகைய படங்கள் எவ்வளவு வசூல் பெற்றனர் என்பதை நாம் பார்க்க உள்ளோம்.

நேர்கொண்ட பார்வை- உலகம் முழுவதும் ரூ 107 கோடி, தமிழகம்- ரூ 70 கோடி, விஸ்வாசம்- உலகம் முழுவதும் ரூ 183 கோடி, தமிழகம்- ரூ 126 கோடி, விவேகம்- உலகம் முழுவதும் ரூ 127 கோடி, தமிழகம்- ரூ 70 கோடி, வேதாளம்- உலகம் முழுவதும் ரூ 122 கோடி, தமிழகம்- ரூ 76 கோடி, என்னை அறிந்தால்- உலகம் முழுவதும் ரூ 90 கோடி, தமிழகம்- ரூ 50 கோடி, வீரம்- உலகம் முழுவதும் ரூ 80 கோடி, தமிழகம் ரூ 52 கோடி, ஆரம்பம்- உலகம் முழுவதும் ரூ 95 கோடி, தமிழகம் ரூ 55 கோடி, பில்லா2- உலகம் முழுவதும் ரூ 55 கோடி, தமிழகம் ரூ 34 கோடி, மங்காத்தா- உலகம் முழுவதும் ரூ 75 கோடி, தமிழகம் ரூ 50 கோடி.

இந்த படங்களில் அஜித் அவர்கள் ஹிட்டான படங்களையும்,நல்ல வசூலையும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது அஜித் அவர்கள்  வலிமை படத்தில் நடித்து வருகிறார் இப்படமும் நல்லவசூலை பெரும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Comment