சிஎஸ்கே நிர்வாகம் எடுத்த அதிரடி.! இந்த ஏழு வீரர்களுக்கு ஆப்பு.? அட லிஸ்டில் இந்த ரன் அடித்த வீரரும் உண்டா.! ரசிகர்கள் கவலை

0

இந்த வருட ஐபிஎல் போட்டி  கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் போட்டி நடத்தாமல் வெளிநாடுகளில் போட்டியை நடத்தி வருகிறார்கள், இந்த நிலையில் இன்று சிஎஸ்கே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன, சிஎஸ்கே அணி இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது.

இதுவரை 10 போட்டிகள் சிஎஸ்கே அணி விளையாடி உள்ளது அதில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, அதனால் பிளே ஆப் தகுதியை இழக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது, இந்தநிலையில் சிஎஸ்கே அணி இன்று நடைபெற இருக்கும் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் மோசமான விளையாட்டை பார்த்த நிர்வாகம் சிஎஸ்கே வில் உள்ள ஏழு வீரர்கள் அதிரடியாக நீக்குவதற்காக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. சிஎஸ்கே அணியின் தொடர் சொதப்பலால் சிஎஸ்கே மீது நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருக்கிறது அதனால் அணியிலிருந்து ஏழு வயதான வீரர்களை நீக்க முடிவு செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது அதேபோல் 2019 ஆண்டு இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஆனால் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பிலிருந்தே மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள், ஆனால் 2020இல் சிஎஸ்கே மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அது அனைத்தும் தற்போது சுக்குநூறாக உடைந்து உள்ளது.

அதுமட்டுமில்லாமல் தோனி ஒரு வருடமாக எந்த ஒரு விளையாட்டிலும் விளையாடாமல் ஓய்வை அறிவித்த பிறகு விளையாடும் முதல் போட்டி என்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது,. 10 போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது அதனால் மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபற வேண்டும் அப்பதான் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

csk
csk

இந்தநிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பயிற்சியாளர் பிளம்மிங் மற்றும் மோசமாக விளையாடி வரும் வீரர்கள் என அனைவரும் ஏதும் நிர்வாகம் அதிரடி ஆக்சன் எடுக்க இருக்கிறது, 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பே சிஎஸ்கே அணியில் உள்ள கேதர் ஜாதவ், ஷான் வாட்சன், பியூஸ் சாவ்லா, இம்ரான் தாஹிர், முரளி விஜய் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அணியில் ஓரளவு ரன் குவிக்கும் டூப்ளேசிஸ் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோரையும் அணையில் தக்க வைக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளது csk நிர்வாகம், அது மட்டும் இல்லாமல் முழுக்க முழுக்க இளம் வீரர்களைக் கொண்ட அணியை தயார் செய்ய வேண்டுமென சிஎஸ்கே நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.