தோனி வேண்டுமென்றால் எங்க அணிக்கு வரட்டும்.! தோல்விக்கு பிறகு கிண்டலடித்த நியூசிலாந்து அணி வீரர்

0
MS-Dhoni
MS-Dhoni

உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் மோதிக்கொண்டன. இதில் நியூஸிலாந்து அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்தது பின்பு ஜடேஜாவும் தோனியும் அணியின் சரிவை மீட்டெடுத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜடேஜா அரைசதத்தை கடந்தார், போட்டியில் இறுதிவரை சிறப்பாக ஆடினார் பின்பு இவர் அவுட் ஆனார் அதன் பிறகு தோனி இந்திய அணியை வேற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ரன் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதன்பிறகு மடமடவென விக்கெட் சரிந்து இந்தியா தோல்வியை சந்தித்தது, இந்தியா தோல்விக்கு பிறகு நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார், அப்பொழுது தோனியை உங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு நியூசிலாந்து அணி கேப்டன் டோனி எங்கள் அணியில் இணைய வேண்டும் என்றால் அவரது தேசிய அடையாளத்தை மாற்ற வேண்டும் ஒருவேளை அதை மாற்றினால் அவரை எங்க அணியில் சேர்த்துக் கொள்வோம் என கிண்டலாக பதில் அளித்தார், இது தோனியின் ரசிகர்கள் இடையே கோபத்தை உண்டாக்கியுள்ளது.