தர்பாருக்கு பிறகு இந்த படம் தான் பிரபல திரையரங்கம் வெளியிட்ட அதிரடி அப்டேட்.!

0
darbar
darbar

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு பல திரைப்படங்கள் வெளியாகின்றன அதேபோல் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு சர்ச்சைகளால் வெளியாகாமல் கிடப்பில் இருக்கின்றன, மேலும் ஒரு திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் சர்ச்சை சந்தித்தால் பரவாயில்லை ஆனால் இன்று வெளியாகியுள்ள திரௌபதி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சர்ச்சையை சந்தித்தது.

இந்த நிலையில் இன்று பல திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது திரௌபதி , இந்த திரைப்படம் நாடகக் காதலை தோலுரித்துக் காட்டியுள்ளது, அதனால் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதுவும் ஒரு சில பகுதிகளில் இந்த திரைப்படத்தை வெறித்தனமாக காண ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள திரௌபதி திரைப்படத்திற்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்பதை பிரபல திரையரங்கமான நெல்லை ராம் சினிமாஸ் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

Draupathi
Draupathi

அதில் அவர்கள் கூறியதாவது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தர்பார் திரைப்படத்திற்கு பிறகு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது, முதல் நாள் பிரமாண்டமாக ஆரம்பித்துள்ளது என கூறியுள்ளார்கள்.