“ஆசை” படத்துக்கு பின் இயக்குனர் வசந்த் உடன் கூட்டணி அமைக்க மறுத்த அஜித் – பல வருடம் மறைந்து இருந்த உண்மை.

நடிகர் அஜித்குமார் சமீப காலமாக தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் தல அஜித்திற்கு ஒரு இயக்குனரின் பிடித்துவிட்டால் அந்த இயக்குனருடன்  தொடர்ந்து கூட்டணி அமைப்பது வழக்கம். ஏற்கனவே சிறுத்தை சிவாவுடன் நான்கு முறை கூட்டணி அமைத்தார்.

அவரைத் தொடர்ந்து இப்போது ஹச். வினோத்துடன் மூன்றாவது  முறையாக கூட்டணி அமைத்து வலம் வருகிறார் இதனால் அந்த இயக்குனர்களும் செம்ம சந்தோஷமாக இருக்கின்றனர். ஆனால் அஜித்தை வைத்து புதுமுக இயக்குனர்கள் அல்லது ஏற்கனவே அஜித்தை வைத்து ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களுக்கும்  இதனால் வாய்ப்புகள்  கிடைக்காமல் போகின்றது.

அந்த வகையில் அஜித்தை வைத்து ஆசை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வசந்த் எப்பொழுதும் அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசை படுகிறார் ஆனால் அஜித்தோ  வாய்ப்புகள் கொடுக்காமல் இருக்கிறார். ஏன் அஜித் வாய்ப்பு கொடுக்காமல் இருக்கிறார் என்பது குறித்தும் தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் வசந்த் ஒரு படத்தின் கதையை கூறி விட்டால் அதை தத்ரூபமாக அப்படியே கொண்டுவர வேண்டும் என நினைப்பார் மேலும் அவர் நினைக்கின்ற கதாபாத்திரத்தை நீங்கள் சரியாக கொண்டு வரவில்லை என்றால் பல முறைகேடுகள் எடுப்பார். மேலும் கண்டிப்பாக இருப்பார். ரொம்ப கண்டிப்பாக இருப்பதால் அந்த படம் முடியும் வரை நடிகர் நடிகைகள் ஒரு வழியா ஆகிவிடுவார்களாம்.

அதை நேரிலேயே அஜித் உணர்ந்து உள்ளதால் அதன் பின் அவருடன் இணைந்து நடிக்க சுத்தமாக அவருக்கு பிடிக்கவில்லை என்பதே ஒரு மறைமுகமான உண்மை என தெரிய வந்துள்ளது. அதனால்தான் இதுவரையிலும் ஹிட் பட இயக்குனர் வசந்த் வாய்ப்புகளை கொடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

Leave a Comment