நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாதனை படைத்த தெறி.! ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டம்.!

இளைய தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக பல திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாக உருவாகி ரசிகர்களிடையே வெற்றி கண்டு வருகிறது அந்த வகையில் பார்த்தால் விஜய் நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப் படங்களும் வசூலை வாரி குவித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும் அந்த அளவிற்கு விஜயின் திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் மிக ஆவலுடன் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதனைதொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எங்கு தொடங்கலாம் என படக்குழுவினர் யோசித்துக் கொண்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் தளபதி 65திரைப்படத்தை விட ரசிகர்கள் பலரும் தளபதி 66வது திரைப்படத்தைப் பற்றி தான் பல தகவல்களைக் கேட்டு வருகிறார்கள் அதற்கு ஏற்றது போல் தளபதி 66 திரைப்படத்தைப் பற்றி தான் கடந்த சில நாட்களாக தகவல் வைரலாகி வருகிறது.

மேலும் இளைய தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தெறி இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது இசையை முழுமையாக அமைத்தார் அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய்க்கு ஜோடியாக இதில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் போன்ற நடிகைகள் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay4
vijay4

இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றி தற்பொழுது ஒரு தகவல் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஈனா மீனா டீக்கா என்ற பாடல் தற்பொழுது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்துள்ளதாம்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தளபதி விஜய் படம் எப்போது வேணாலும் சாதனை படைக்கும் என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment