சினிமாவிற்கு அறிமுகமான சில திரைப்படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிய பல நடிகைகள் உள்ளார்கள்.அந்த வகையில் தற்பொழுது விஜய் மற்றும் சூர்யா என் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை ஒருவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார் என்று தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை பூமிகா சால்வா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி,தெலுங்கு என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக வந்தார்.இப்படிப்பட்ட நிலைகள் கலந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இதனால் பெரிதாக திரைப்படங்கள் நடிக்காமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தமிழில் மிகக் குறைந்த திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார் ஆனால் இவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது பல ரசிகர்களின் கனவு கண்ணியாக இருந்து வரும் இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பூமிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளாராம்.

சமீபத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான சீதாராமம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பூமிகா தற்பொழுது தமிழ் திரையுலகிலும் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்திவுள்ளது. அதாவது ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா அருள் மோகன் கூட்டணியில் உருவாக்கி வரும் ஜெயம் ரவியின் 30வது திரைப்படத்தில் கதாநாயகரின் சகோதரியாக பூமிகா சால்வான் நடித்த இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் படப்பிடிப்பில் நேற்று அவர் கலந்து கொண்ட நிலையில் அதனை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் தற்போது ரொமான்ஸ் மற்றும் காமெடி படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற வருகிறது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.