8 வருடத்திற்கு முன்பு தோத்துட்டேன். ஆனா இந்த முறை விடமாட்டேன்.! மீண்டும் நேரடியாக களத்தில் மோதும் விஜய் சூர்யா.

0

நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், அதேபோல் இவர்கள் இருவரும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். அதன் பிறகு சில திரைப்படங்களில் மோதிக் கொண்டார்கள்.

இந்த நிலையில் மீண்டும் விஜய் மற்றும் சூர்யா மோத இருக்கிறார்கள் இந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது, விஜய் பிகில் படத்தைத் தொடர்ந்து தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் வருகிற கோடை விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது.

எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என சூர்யா நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார் அவர் தற்பொழுது இறுதிச்சுற்று இயக்குனர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு சூரரைப்போற்று என டைட்டில் வைத்துள்ளார்கள், சில தினங்களுக்கு முன்பு இந்த இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த வருடத்தின் இறுதியில் இந்த திரைப்படம் வெளிவரும் என அறிவித்திருந்தார்கள், ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது அதனால் இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்கள்.

விஜயின் தளபதி 64 திரைப்படமும் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் கோடைவிடுமுறையில் நேரடியாக மோதிக் கொள்ள இருக்கின்றன இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள், இதற்கு முன் விஜய்யின் வேலாயுதம் திரைப்படமும் சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படமும் ஒன்றாக மோதிக்கொண்டன, இந்த படங்கள் வெளியாகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.