28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “பாட்ஷா”வாக களம் இறங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! அதுவும் எந்த திரைப்படத்தில் தெரியுமா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுமார் 1995ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பாட்ஷா இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது தொடர்ந்து சூப்பர் ஸ்டார் என்றால் ஒரு பயத்தை காட்டியது இந்த திரைப்படத்தில் தான் என்று சொல்லலாம்.

இவ்வாறு திரையரங்கியே அலறவிட்ட அந்த திரைப்படம் போல் மீண்டும் ஒரு கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது அதாவது லால் சலாம் என்ற திரைப்படத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகுவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமின்றி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் மிக பிரமாண்டமாக தொடரப்படும் என பட குழுவினர்கள் கூறியுள்ளார்கள்.

laal salam-1
laal salam-1

ரஜினிகாந்த் அவர்கள் இந்த திரைப்படத்தில் ஒரு இஸ்லாமிய கேரக்டரில் நடிக்க இருப்பது மட்டுமின்றி இந்த திரைப்படத்தில் பாட்ஷா திரைப்படத்தில் பார்த்த அதே போன்ற ரஜினியை பார்க்க முடியும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த திரைப்படம் பாட்ஷா திரைப்படத்துடன்  கனெக்ட் ஆகுமா என ரசிகர்கள்  ஆவலுடன் இருக்கிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment